கேக் வெட்டி கொண்டாடிய ரஜினிகாந்த்-தமன்னா: மாஸ் புகைப்படங்கள் வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இது குறித்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்றுடன் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
மேலும் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் ரஜினிகாந்த், தமன்னா, நெல்சன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர் என்பதும் இது குறித்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த மாஸ் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே ’ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
It's a wrap for #Jailer! Theatre la sandhippom 😍💥#JailerFromAug10@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @kvijaykartik @Nirmalcuts @KiranDrk @StunShiva8 pic.twitter.com/Vhejuww4fg
— Sun Pictures (@sunpictures) June 1, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com