close
Choose your channels

ரஜினியுடன் மோதும் சூர்யா.. ஒரே நாளில் 2 மாஸ் படங்கள் ரிலீஸ்.. சூப்பர் தகவல்..!

Thursday, June 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே தேதியில் சூர்யாவின் ’கங்குவா’ படமும் வெளியாகும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அக்டோபர் 10ஆம் தேதி என்பது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை தினம் என்பதால் நீண்ட விடுமுறை கிடைக்கும் நாளில் மாஸ் படம் ரிலீஸ் ஆனால் ஓப்பனிங் வசூல் மிக அபாரமாக இருக்கும் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி சரஸ்வதி பூஜை விடுமுறை தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதே தேதியில் தான் சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாகவும், ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரு படங்களின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அக்டோபர் 10 என்பது உறுதி செய்யப்பட்டால் ஒரே நாளில் ரஜினி மற்றும் சூர்யா படங்கள் போதும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.