ரஜினியுடன் மோதும் சூர்யா.. ஒரே நாளில் 2 மாஸ் படங்கள் ரிலீஸ்.. சூப்பர் தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,June 27 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே தேதியில் சூர்யாவின் ’கங்குவா’ படமும் வெளியாகும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அக்டோபர் 10ஆம் தேதி என்பது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை தினம் என்பதால் நீண்ட விடுமுறை கிடைக்கும் நாளில் மாஸ் படம் ரிலீஸ் ஆனால் ஓப்பனிங் வசூல் மிக அபாரமாக இருக்கும் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி சரஸ்வதி பூஜை விடுமுறை தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதே தேதியில் தான் சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாகவும், ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரு படங்களின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அக்டோபர் 10 என்பது உறுதி செய்யப்பட்டால் ஒரே நாளில் ரஜினி மற்றும் சூர்யா படங்கள் போதும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அடுத்தடுத்து இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் விஜய் ஆண்டனி.. என்னென்ன படங்கள்?

விஜய் ஆண்டனி நடித்த 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இன்னொரு படத்தின் ரிலீஸ் தகவல் அதிகாரப்பூர்வமாக

God Bless You மாமே.. அஜித்தின் 'குட் பேட் அக்லி' அட்டகாசமான செகண்ட் லுக்..!

அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று

நாளை மாணவர்களுக்கு விஜய் நடத்தும் பாராட்டு விழா.. திருவான்மியூர் காவல் நிலையத்தில் மனு..!

10,12 வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் சார்பில் பாராட்டு விழா நாளை நடைபெற இருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின்

திருமணமான 3 மாதத்தில் நல்ல செய்தி சொன்ன இந்திராஜா ரோபோ சங்கர்.. குவியும் வாழ்த்துக்கள்..!

காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு கடந்த மார்ச் மாதம் திருமணமான நிலையில் திருமணம் ஆகி 3 மாதங்களில் நல்ல செய்தி சொன்னதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருவண்னாமலையின் சிறப்புகள், பெருமைகள், அதிசயங்கள்! | ஜோதிடர் பாலாறு சுவாமிகள் | 2வது பாகம்

திருவண்ணாமலை ரகசியங்கள் - இதுவரை கேள்விப்பட்டிராத அதிசய தகவல்கள்! | ALP ஜோதிடர் பாலாறு சுவாமிகள் | 2ம் பாகம்