'பொன்னியின் செல்வன்' பார்த்து ரஜினி, ஷங்கர் என்ன சொன்னார்கள் தெரியுமா? வைரல் டுவிட்!
- IndiaGlitz, [Wednesday,October 05 2022]
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தை கொண்டாடாத திரையுலகினர்களே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயம்ரவியை போனில் அழைத்து பாராட்டிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’பொன்னின் செல்வன்’ குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை பார்த்து தன்னிடம் ஒரு நிமிடம் போனில் பேசியதாகவும், ரஜினி சாருடனான அந்த ஒரு நிமிட உரையாடல் என் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அர்த்தத்தை கொடுத்துள்ளது என்றும் நன்றி தலைவா என்றும் ஜெயம் ரவி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.மேலும் ரஜினிகாந்த் அவர்கள் என்னுடைய நடிப்பு பிடித்திருந்ததாக கூறியது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும், அவருடைய பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி என்றும் ட்விட் செய்துள்ளார்.
அதே போல் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், ‘நீண்ட வருடங்களுக்கு பின்னர் ஒரு தரமான தமிழ் வரலாற்று திரைப்படம் வெளியாகி உள்ளது என்றும் மணிரத்னம் அவர்கள் படங்கள் இயக்குவதில் கிங் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். ரவிவர்மனின் கேமரா, ஏஆர் ரகுமானின் இசை ஆகியவை இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய துணையாக இருந்தது என்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு டுவிட்களும் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
That 1 minute conversation made my day, my year and added a whole new meaning to my career. Thank you Thalaiva for your kind words & childlike enthusiasm. I’m overwhelmed, humbled & blessed to know you loved the movie & my performance ???? @rajinikanth sir
— Arunmozhi Varman (@actor_jayamravi) October 4, 2022
#PS1 Captivates.A quality Tamil historical film after years.#ManiRatnam Sir’s mastery in filmma’King’ proven yet again ????Hats off to @dop_ravivarman ‘s Picturesque depiction.@arrahman music-Riveting!Full 3hrs intrigues U for the sequel.Hail to the vast Army that made this epic!
— Shankar Shanmugham (@shankarshanmugh) October 5, 2022