மீண்டும் ஒரே படத்தில் இணைகிறார்களா ரஜினி-சத்யராஜ்? எந்த படம்? இயக்குனர் யார்?

  • IndiaGlitz, [Monday,April 15 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் இணைந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளார்கள் என்பதும் குறிப்பாக ’தம்பிக்கு எந்த ஊரு’ ’மூன்று முகம்’ ’மிஸ்டர் பாரத்’ ’பாயும் புலி’ ’நான் சிகப்பு மனிதன்’ ’நான் மகான் அல்ல’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்பது தெரிந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’சிவாஜி’ திரைப்படத்தில் சுமன் கேரக்டரில் சத்யராஜை நடிக்க வைக்க ஷங்கர் முயற்சி செய்ததாகவும் ஆனால் சத்யராஜ் அதில் நடிக்க விரும்பவில்லை என்று கூறியதாகவும் அந்த நேரத்தில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ’மிஸ்டர் பாரத்’ படத்திற்கு பிறகு மீண்டும் ஒரே படத்தில் ரஜினிகாந்த் - சத்யராஜ் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த முயற்சியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ரஜினியின் ’தலைவர் 171' திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் சத்யராஜ் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் விரும்புவதாகவும் இது குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சத்யராஜ் இணைந்தால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

உலக அளவில் முதலிடம் பிடித்த 'விசில் போடு'.. 24 மணி நேரத்தில் எத்தனை மில்லியன் தெரியுமா?

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு விருந்தாக 'விசில் போடு' என்ற பாடல் வெளியானது

பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? அதிரடி கலக்கட்டுமா? 'கோட்' படத்தில் விசில் போடு பாடல்..!

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று சித்திரை புத்தாண்டு தினத்தில் விசில் போடு என்ற பாடல்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் தனுஷ் கொடுத்த 'ராயன்' அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்..!

தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் முடிந்தவுடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று

ஒரே நாளில் 2 புதிய படங்கள்.. லோகேஷ் படத்தை அடுத்து இன்னொரு ராகவா லாரன்ஸ் படம்..!

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் லோகேஷ் நாகராஜ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பதாக இன்று காலை செய்தி வெளியானது என்பதை பார்த்தோம்.

விஷாலின் முக்கிய அரசியல் அறிவிப்பு.. 2026ல் விஜய் vs விஷாலா?

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை அறிவித்த நிலையில் விஷாலும் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.