ரஜினி-ரஞ்சித் மீண்டும் இணையும் படத்தில் தனுஷ். அதிகாரபூர்வ தகவல்

  • IndiaGlitz, [Tuesday,August 30 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்பாம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ.800 கோடி வசூலித்த இந்த படத்தின் அபார கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. ஆம், ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை ரஞ்சித் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படத்தை தான் தயாரிப்பதை உறுதி செய்யும் வகையில் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த படம் 'கபாலி 2' என்பது உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் தனுஷ் வெளியிட்டுள்ள வீடியோவின் பின்னணியில் 'நெருப்புடா' பாடல் ஒலிப்பதால் இந்த படம் 'கபாலி 2'ஆக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது ரஜினிகாந்த், ஷங்கரின் '2.0' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரஜினி-தனுஷ்-ரஞ்சித் இணையும் மெகா கூட்டணி படம் தொடங்கவுள்ளது.

More News

கமல் பாணியை பின்பற்றும் விஜய்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும்...

வாய்மையே வெல்லும்” என்பதே எங்கள் தாரக மந்திரம். நடிகர் சங்கத்தின் நீண்ட அறிக்கை

நாசர் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கம், சிறப்பான முறையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒருசிலர்...

விஷால்-மிஷ்கின் 'துப்பறிவாளன்' படத்தில் இன்னொரு பிரபல ஹீரோ

விஷால் நடித்து வரும் 'கத்திச்சண்டை' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் அவர் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' என்ற த்ரில் படத்தில் நடிக்கவுள்ளார்...

சென்னை காவல்துறை ஆணையரிடம் நாசர் அளித்த புகாரின் முழுவிபரம்

நடிகர் சங்கம் மீதும், நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் மீதும் அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் புகார் கூறி வருபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க...

யார் வில்லன் என்பது கிளைமாக்ஸில்தான் தெரியும். கே.வி.ஆனந்த்

'அனேகன்' வெற்றிக்கு பின்னர் விஜய்சேதுபதி-டி.ராஜேந்தர் நடிப்பில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத படத்தை இயக்கி வரும் கே.வி.ஆனந்த்...