ரஜினியின் கொரோனா பரிசோதனை ரிசல்ட்: சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,December 23 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு 8 மாதங்களுக்கு முன்னர் சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ’அண்ணாத்த’ படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் படப்பிடிப்பு தளத்திலிருந்து ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் வெளியேறியதாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பின் போது வழக்கமாக செய்த பரிசோதனையின் போது நான்கு பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு பேர்களை தவிர சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் நெகட்டிவ் ரிசல்ட் வந்து உள்ளது. இருப்பினும் படக்குழுவினர்களின் பாதுகாப்பை முன்னிட்டு படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என்ற தகவல் தற்போது அனைத்து ரஜினி ரசிகர்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

இன்னும் கொஞ்ச நாள்தான்.. வெளியான உலகம் அழியும் புதிய தேதி… ஆராய்ச்சி வீடியோ!!!

2020 ஆம் ஆண்டு பிறந்த உடனே இந்த உலகம் அழிந்துவிடுமா என்ற அச்சம் பலரின் மனதில் எழுந்தது

நடிகை நயன்தாராவுக்கு ராதிகா வாழ்த்து: ஏன் தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இணைந்து தொடங்கிய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் 'கூழாங்கல்' என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் செய்யப்போவதாக

'அண்ணாத்த' படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: ரஜினிக்கு கொரோனா பரிசோதனை?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு தளர்வுக்கு பின் சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது என்பதை பார்த்தோம்

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா??? வெளியான புது அறிவிப்பு!!!

கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதோடு கொரோனா பரவலைக் கட்டப்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

குப்பையில் வீசப்பட்ட ஒன்றரை லட்ச ரூபாய்... அதற்கு பின் நடந்த பெரிய டிவிஸ்ட்!!!

இலங்கை நாட்டில் நேற்று நடைபெற்ற ஒரு சம்பவம் கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.