ரஜினிகாந்த்-நயன்தாராவின் 'சாரக்காற்றே' பாடல்: வைரலாகும் சூப்பர் ஸ்டில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஒருபக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் ’அண்ணாத்த’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது என்பதும் ரஜினிக்காக எஸ்பிபி பாடிய கடைசி பாடலான இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் இரண்டாவது பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. ‘சாரக்காற்றே’ என்று தொடங்கும் இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர்.
இந்த பாடல் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா பாடும் பாடலாக படத்தில் அமைந்துள்ளது என்றும் இந்த பாடலின் ஸ்டில் ஒன்று வெளியாகி உள்ள நிலையில் செம சூப்பரான இந்த ஸ்டில் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#SaaraKaattrae - The second single from #Annaatthe sung by @sidsriram & @shreyaghoshal is releasing Tomorrow@ 6PM
— Sun Pictures (@sunpictures) October 8, 2021
@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer #Yugabharathi @BrindhaGopal1 @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #AnnaattheSecondSingle pic.twitter.com/Nh2vkHmM7n
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments