ரஜினியுடன் பிரபலம் கலந்து கொண்ட 'ஜெயிலர்' சக்சஸ் மீட்.. அனைவருக்கும் சிறப்பு பரிசு..!

  • IndiaGlitz, [Sunday,September 10 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் வெளியாகி இன்றுடன் ஒரு மாதம் ஆகி உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் சக்சஸ் மீட் நடந்து கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மோகன்லால் கலந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது. மேலும் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது.

ரஜினி, மோகன்லால், நெல்சன் உள்பட படக்குழுவினர் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது

‘ஜெயிலர்’ திரைப்படம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பதும், ஏற்கனவே ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகிய மூவருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விலை உயர்ந்த ஆடம்பர கார் பரிசு வழங்கியது என்பது தெரிந்ததே.

More News

படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய ஜெயம் ரவி.. வாழ்த்து கூறிய 3 நாயகிகள்..!

நடிகர் ஜெயம் ரவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

'மார்க் ஆண்டனி' படத்தில் கார்த்தி.. என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

விஷால் மற்றும் எஸ்ஜே. சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான 'மார்க் ஆண்டனி'  திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில்

'லியோ'வின் 'நா ரெடி' பாடலின் வரிகள் திடீர் நீக்கம்.. என்ன நடந்தது?

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'லியோ' திரைப்படத்தின் சிங்கிள் பாடலான 'நா ரெடி' என்ற பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது

இரண்டரை மணி நேர மேக்கப்.. இதுவரை இல்லாத போர்க்காட்சிகள்: 'கங்குவா' படத்தின் அரிய தகவல்கள்..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தப் படத்தின் முக்கிய தகவல்கள் சில வெளியாகி உள்ளன.  

இதுவரை திரையில் தோன்றாத வித்தியாசமான லுக்: ஜெயம் ரவியின் மிரட்டும் “சைரன்” பட ஃப்ரீ பேஸ் லுக் !!

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும்