ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்: வைரலாகும் ரஜினி-மோகன்பாபு புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Friday,May 21 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபு ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குடும்ப அளவில் இரு குடும்பத்தினர் மிகவும் நெருக்கமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தனது சமூக வலைத்தளத்தில் ரஜினிகாந்த் மற்றும் மோகன்பாபு இணைந்து எடுத்த புகைப்படங்களை பதிவு செய்து ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்’ என்ற கேப்ஷனையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்த் நடித்த ’அன்னை ஒரு ஆலயம்’ ’தாய்மீதுசத்தியம்’ ’கர்ஜனை’ ஆகிய படங்களில் மோகன்லால் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் தமிழில் சூப்பர் ஹிட்டான ’நாட்டாமை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘பெத்தராயுடு’ திரைப்படத்தில் மோகன் பாபு நடித்திருந்த நிலையில் அதில் விஜயகுமார் நடித்த கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.