close
Choose your channels

ரஜினி-லோகேஷ் படத்தை தயாரிப்பது இந்த நிறுவனமா? அப்ப 'கைதி 2' என்ன ஆச்சு?

Thursday, April 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கும் நிறுவனம் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜெயிலர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ’லால் சலாம்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். மேலும் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ’ஜெய் பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினிகாந்த் நடித்க உள்ளார் என்பதும் இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினியின் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் அதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ’கைதி 2’ படத்தை இயக்குவார் என்று கூறப்படும் நிலையில் தற்போது திடீரென ரஜினி படமும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினி-லோகேஷ் கனகராஜ் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று தெரிகிறது. லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ வரும் அக்டோபரில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் ரஜினி படத்திற்கு முன்பே ‘கைதி 2’ படத்தை இயக்கி முடித்துவிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment