close
Choose your channels

ரஜினி, லோகேஷ் கனகராஜ் சம்பளமே 300 கோடிக்கும் மேல்? 'கூலி' படத்தின் பட்ஜெட் எவ்வளவு?

Wednesday, April 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘கூலி’ படத்தின் டைட்டில் வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதும், இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் மற்றும் ரஜினி, லோகேஷ் கனகராஜ் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘கூலி’ படத்தில் நடிக்க ரஜினிகாந்த் அவர்களுக்கு 260 முதல் 280 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் அனேகமாக ’வேட்டையன்’ மற்றும் ‘கூலி’ ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆனால் ’தலைவர் 172’ படத்திற்கு ரூ.300 கோடி சம்பளம் கிடைக்க கூட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் ‘கூலி’ இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சுமார் 60 கோடி வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவல் உண்மையாக இருந்தால் ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் சம்பளம் மட்டுமே ரூ.300 கோடிக்கும் அதிகமாக இருக்கிறது என்றும் அது மட்டும் இன்றி அனிருத் உள்பட டெக்னீசியன்கள் மற்றும் இந்த படத்தில் நடிக்கும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உட்பட நட்சத்திரங்களின் சம்பளங்கள் எல்லாம் சேர்த்தால் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடிக்கும் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் ’ஜெயிலர்’ திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் ஆன நிலையில் ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் இணைவதால் இந்த படம் அதைவிட அதிகமாக வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் தான் இந்த படத்திற்காக இவ்வளவு பெரிய தொகை செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment