ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் திடீர் சந்திப்பு.. 'தலைவர் 171' பட அறிவிப்பா?

  • IndiaGlitz, [Wednesday,April 05 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் திடீரென சந்தித்து உள்ளதாகவும் இருவரும் ஒரு படத்தில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜெயிலர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது என்பதும் இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘லால் சலாம்’ என்ற படத்தில் ரஜினிகாந்த் நடிக்க தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதனை அடுத்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும், ’தலைவர் 170’ என்ற இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் ’தலைவர் 171’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இது குறித்த சந்திப்பு நடந்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் சந்தித்து ’தலைவர் 171’ படம் குறித்து ஆலோசனை செய்ததாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க இருந்த நிலையில் அந்த படம் எதிர்பாராத வகையில் டிராப்பானது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ரஜினி - லோகேஷ் சந்திப்பு தமிழ் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.