இன்று ஒரே நாளில் ரஜினி ரசிகர்களுக்கு கிடைத்த இரட்டை விருந்து

  • IndiaGlitz, [Thursday,June 07 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் இன்று வெளியாகி நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் கர்நாடகத்தில் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கும் படம் வெளியாகவுள்ளதாகவும், பெங்களூரில் உள்ள ஒருசில திரையர்ங்குகளில் முன்பதிவு தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் 'காலா' படம் ஹிட் என்ற செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கமும் உறுதி செய்துள்ளது.

இமயமலை அருகில் உள்ள டார்ஜிலிங்கில் உள்ள ஒரு கல்லூரியில் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், அந்த கல்லூரியின் முன் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் உள்பட படக்குழுவினர் நின்றிருக்கும் புகைப்படம் ஒன்றையும் அந்த சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இன்று ஒரே நாளில் 'காலா' ரிலீஸ் மற்றும் வெற்றி செய்தியும், ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது என்ற செய்தியும் ரஜினி ரசிகர்களுக்கு கிடைத்த இரட்டை விருந்தாக கருதப்படுகிறது.