அமைச்சர் உதயநிதிக்கு கமல், ரஜினி வாழ்த்து.. விஷாலின் வேண்டுகோள் என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர் விஷால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து கூறியதாவது: வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய வாழ்த்து செய்தியில், ‘தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் ஆனதற்கு ஒரு நண்பன் என்ற வகையில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் கூறிய நடிகர் விஷால் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல உயிர்கள் பலியாகி இருப்பதாகவும் அதற்கான தேவையான நடவடிக்கையை அமைச்சர் உதயநிதி எடுப்பார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.@Udhaystalin
— Rajinikanth (@rajinikanth) December 14, 2022
வாழ்த்துகிறேன் தம்பி @Udhaystalin . அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.
— Kamal Haasan (@ikamalhaasan) December 14, 2022
#Watch | “ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்” - நடிகர் விஷால்#SunNews | #Onlinegambling | #Vishal | #UdhayanidhiStalin pic.twitter.com/9aqeFuHamq
— Sun News (@sunnewstamil) December 14, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments