தமிழக முதல்வர் உறவினர் மறைவு.. ரஜினிகாந்த், கமல்ஹாசன் இரங்கல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உறவினர் மறைவை அடுத்து கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சகோதரி செல்வி என்பவரின் கணவர் முரசொலிசெல்வம், பெங்களூரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் காலமான நிலையில் அவருடைய மறைவிற்கு முதலமைச்சர் உள்பட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது:
கமல்ஹாசன்:
என்னுடைய இனிய நண்பர் திரு. முரசொலி செல்வம் மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. பத்திரிகை ஆசிரியராக அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக திராவிடக் கருத்தியலைச் சுமந்தவர். திரைப்படத் துறையிலும் பங்களிப்பாற்றியவர். எல்லாவற்றுக்கும் மேலாக நட்புக்கு மரியாதை அளிக்கிற நல்ல மனிதர். திரு. முரசொலி செல்வம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ரஜினிகாந்த்:
திரு முரசொலி செல்வம் அவர்கள் என்னுடைய நீண்ட கால நண்பர். அருமையான மனிதர். அவருடைய மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
திரு முரசொலி செல்வம் அவர்கள் என்னுடைய நீண்ட கால நண்பர். அருமையான மனிதர். அவருடைய மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். #MurasoliSelvam
— Rajinikanth (@rajinikanth) October 10, 2024
என்னுடைய இனிய நண்பர் திரு. முரசொலி செல்வம் மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. பத்திரிகை ஆசிரியராக அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக திராவிடக் கருத்தியலைச் சுமந்தவர். திரைப்படத் துறையிலும் பங்களிப்பாற்றியவர். எல்லாவற்றுக்கும் மேலாக நட்புக்கு மரியாதை அளிக்கிற நல்ல மனிதர்.…
— Kamal Haasan (@ikamalhaasan) October 10, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments