ஒரே மேடையில் கமல்-ரஜினி! மீண்டும் ஒரு ஆகஸ்ட் புரட்சி?
- IndiaGlitz, [Thursday,July 20 2017]
1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி வெள்ளையனை வெளியேற்றுவதற்காக தேசப்பிதா மகாத்மா காந்தி நடத்திய போராட்டம் தான் ஆகஸ்ட் புரட்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த புரட்சி போராட்டத்திற்கு பின்னர்தான் பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வெகுவிரைவில் சுதந்திரம் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்தனர்.
இந்த நிலையில் 75 ஆண்டுகள் கழித்து அதே ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள முரசொலி பவழ விழாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. கடந்த சில நாட்களாகவே ரஜினி, கமல் அரசியல் குறித்து பிரேக்கிங் நியூஸ் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த விழாவில் அரசியல் கொள்ளையர்களை ஆட்சியில் இருந்து விரட்ட இருவரும் இணைந்து குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு உண்மையில் நடந்தால் இதுவும் ஒரு ஆகஸ்ட் புரட்சியாகவே கருதப்படும்