ரஜினி, கமல் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரபலத்தின் பயோபிக் திரைப்படம்.. மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Monday,February 26 2024]

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் அவ்வப்போது சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது இருவரும் ஒரே படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியானது என்பதும், இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இளையராஜாவின் கேரக்டரில் தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி இயக்குனர் பால்கி அவர்களுக்கு பதிலாக ’கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இளையராஜாவின் நெருங்கிய நண்பர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அதேபோல் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டால் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.

 

More News

மறைந்த சகோதரி பவதாரிணியின் த்ரோபேக் புகைப்படத்தை பகிர்ந்த யுவன்.. ரசிகர்கள் ஆறுதல்..!

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி சமீபத்தில் காலமான நிலையில் அவருடைய சகோதரர் யுவன் சங்கர் ராஜா தனது சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்

பிரபல அரசியல்வாதியை எதிர்த்து போட்டியிடுகிறாரா ரஜினி, கமல் பட நடிகை.. பெரும் பரபரப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் உடன் நடித்த நடிகை பிரபல அரசியல்வாதியை எதிர்த்து வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என் அம்மாவை அடுத்து எனக்கு நீங்கள் தான் முக்கியம்: நெகிழ்ச்சியுடன் பேசிய ராகவா லாரன்ஸ்..!

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நேற்று ரசிகர்கள் மத்தியில் பேசிய போது என் அம்மாவை எடுத்து நீங்கள் தான் என்று நிகழ்ச்சியுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

'எதிர்நீச்சல்' சீரியல் நடிகையா இவர்? சிவப்பு காஸ்ட்யூமில் செம்ம கிளாமர்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் நடித்த நடிகை ஒருவர் தாய்லாந்து கடற்கரையில் கிளாமர்

காணாமல் போய் 300 நாளாச்சு: கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு: அஜித் ரசிகர்கள் அறிவிப்பு..!

அஜித் நடித்த வரும் 'விடாமுயற்சி' படத்தின் அப்டேட் வெளியாகி 300 நாள் ஆகிவிட்டது என்றும் அப்டேட் வெளியிடாத லைக்கா நிறுவனத்தை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தருவோருக்கு