ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய ரஜினி-கமல்: வீடியோ வைரல்!

இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் இன்று தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத பொதுமக்கள், இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று தீபாவளி கொண்டாடும் பொது மக்களுக்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: எல்லா உயிரும் இன்பமெய்துக. எல்லா உடலும் நோய் தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க. ஒளியினால் இருள் அகல்க. மனங்களில் மகிழ்வு பெருகுக. என் தீபாவளி வாழ்த்து.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்கள் முன் தோன்றி கையசைத்து தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
 

More News

கோலார் தங்க வயல் கதைக்கள பின்னணியில் 'தங்கலான்': ரசிகர்களை கவர்ந்த காணொளி!

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'தங்கலான்' என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

அடுத்த வாரத்தில் இருந்து சும்மா பட்டாசு வெடிக்கும்: 'வாரிசு' படக்குழுவின் அதிரடி அறிவிப்பு

தளபதி விஜய் நடித்துவரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

ஐஸ்வர்யா ராஜேஷின் 'டிரைவர் ஜமுனா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நடிகைகளாக நயன்தாரா, த்ரிஷா உள்பட ஒரு சிலர் உள்ளனர். அந்த வரிசையில் கடந்த சில ஆண்டுகளாக நடிகை ஐஸ்வர்யா

ரஜினி, விஜய் படங்களில் பணிபுரிந்த பிரபலம் காலமானார்: மாரடைப்பு என தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்தவர் திடீரென மாரடைப்பு காரணமாக காலமாகி உள்ளதால் கோலிவுட் திரையுலகமே

'அவதார்' ரன்னிங் டைம் இவ்வளவா? ரசிகர்களுக்கு செம விருந்துதான்!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய 'அவதார்' திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.