டெல்லியை அடுத்து லண்டன். தொடரும் 2.0வின் பிரமாண்டம்
Friday, March 18, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த், அக்சய்குமார் உள்பட பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் என்ற வதந்தியை தயாரிப்பாளர் மறுத்துள்ளதாக வந்த செய்தியினை நேற்று பார்த்தோம். மேலும் இந்த படத்தின் பாடல் வெளியீடு நடைபெறும் இடம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இதுவரை இல்லாத வகையில் மிகவும் பிரமாண்டமாக லண்டனில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஷங்கரின் முந்தைய படமான 'ஐ' படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் அர்னால்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிலையில் இந்த விழாவில் சர்வதேச பிரபலம் ஒருவர் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த்-அக்ஷயகுமாரின் நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, ஷங்கரின் இயக்கம், ரூ.350 கோடி பட்ஜெட், பிரமாண்ட இசை வெளியீட்டு விழா ஆகியவைகள் இந்த படத்தின் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments