சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' பர்ஸ்ட்லுக் வெளியாவது எப்போது? புதிய தகவல்

  • IndiaGlitz, [Thursday,June 09 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படம் வரும் ஜூலையில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு படமான '2.0' படத்திற்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் மேக்கப் டெஸ்ட் செய்துள்ளார் என்பதை சற்று முன்னர் பார்த்தோம்.
இந்நிலையில் '2.0' படத்தின் பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தயாரிக்கும் ஆரம்பமாகவுள்ளதாகவும் வரும் செப்டம்பரில் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.