சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தின் பிரமாண்டமான ஃபர்ஸ்ட்லுக் விழா துளிகள்

  • IndiaGlitz, [Sunday,November 20 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் '2.0' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டபோது இந்த பர்ஸ்ட்லுக்கிற்கு வானளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த எதிர்ப்பார்புகளின் அளவுகள் சிறிதுகூட குறையாமல் மிகப்பெரிய அளவில் இன்று மும்பையில் நடந்த பிரமாண்டமான விழாவில் '2.0' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவின் துளிகள் குறித்து தற்போது பார்ப்போம்
இந்த விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் அனைவருக்கும் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன், எடிட்டர் அந்தோணி, ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா உள்பட அனைவரும் முன்கூட்டியே விழா நடைபெறும் இடத்திற்கு வந்து தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகியோர் ரஜினியின் இந்த பிரமாண்டமான விழாவை நேரில் காண வருகை தந்திருந்தனர். பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரண்ஜோகரின் வர்ணஜால வார்த்தைகளுடன் விழா தொடங்கியது.
ஜெயமோகன் (வசனகர்த்தா): இந்த படத்தில் குறைந்த ரொமான்ஸ் காட்சிகளும் அதிகப்படியான டெக்னிகள் அம்சங்களும் நிறைந்துள்ளதால் இது ஒரு முழுமையான படம் என்றே கூறலாம்
ஸ்ரீனிவாஸ் மோகன் (கிராபிக்ஸ் சூப்பர்வைசர்): ஷங்கரின் படத்தில் பணிபுரிவது என்பதே ஒரு சவாலான விஷயம்தான். அதிலும் இந்த படம் இதுவரை நான் வேலை பார்த்த படங்களில் வித்தியாசமானது மட்டுமின்றி பிரமாண்டமானது என்றும் கூறலாம். இந்த படத்தை ஒரு திரைப்படமாக மட்டும் என்னால் பார்க்க முடியாது. இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்
எமி ஜாக்சன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்ததை பெருமையாக கருதுகிறேன். ஷங்கர் அவர்களுடன் நான் மூன்று வருடங்கள் இணைந்து இந்த படத்திற்காக பணியாற்றியது மிகப்பெரிய விஷயம். ஒரு நடிகரிடம் இருந்து எப்படி நடிப்பை வெளியே கொண்டு வர வேண்டும் என்பது அவருக்கு தெரியும்.

எடிட்டர் அந்தோணி: இதுவரை நான் பணிபுரிந்த படங்களில் மிகவும் சவால் கொடுத்த படம் '2.0 படம் என்றால் அது மிகையில்லை. ஒவ்வொரு முறையும் காட்சிகளை கட் செய்யும்போது 3D கண்ணாடி போட்டு பணிபுரிந்தேன்
ரசூல் பூக்குட்டி (சவுண்ட் எஞ்சினியர்): 2.0' திரைப்படம் தான் முதன் முதலில் வித்தியாசமான முறையில் சவுண்ட் எபெக்ட் செய்யப்பட்ட படம்
சுபாஷ்கரன் (லைகா சேர்மன்): ஸ்க்ரிப்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் இந்த படத்திற்கு நான் சம்மதித்தேன்
ராஜு மகாலிங்கம்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களின் கண்களுக்கு மிக அருகில் அவர் வந்து செல்லும் 3D தொழில்நுட்பம் உண்மையில் மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இந்த வாய்ப்பை மிகப்பெரிய பட்ஜெட்டில் அளிக்கும் சுபாஷ்கரன் அவர்களுக்கு நான் முதலில் எனது நன்றி தெரிவித்து கொள்கிறேன். சினிமா தாஜ்மஹாலை உருவாகும் அவர் ஒரு நவீன ஷாஜஹான்.
ஷங்கர்:எந்திரனைவிட எந்த அளவுக்கு பெட்டராக கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கொடுத்துள்ளேன். எந்திரன் படம் எவரெஸ்ட் சிகரத்தை தொடும் சாதனை என்றால், '2.0' எவரெஸ்ட் சிகரத்தை தூக்கி தோளில் வைக்கும் அளவுக்கு பெரிய படம். இந்த படத்தின் மூன்றாவது பாகமும் வரும்

அக்ஷயகுமார்: இதுவரை நான் நடித்த எந்த படத்திலும் இதுபோன்ற மேக்கப்களை நான் போட்டதே இல்லை. மேக்கப்பிற்காக மட்டும் ஒவ்வொரு முறையும் மூன்று மணி நேரம் உட்கார்ந்திருக்கின்றேன். மேக்கப் கலைஞர்களுக்கும் '2.0' படகுழுவினர்களுக்கும் எனது நன்றி. ரஜினிகாந்த் அவர்களின் முன் நடிக்க முதலில் நான் அதிர்ச்சி அடைந்தது உண்மை. இந்த படத்தின் ஸ்க்ரிப்ட் கண்டிப்பாக இந்திய சினிமாவில் ஒரு சரித்திரத்தை உருவாக்கும்
ரஜினிகாந்த்: '2.0' படத்தின் உண்மையான ஹீரோ நான் இல்லை. கடினமான உழைப்பை தந்த அக்சயகுமார்தான் ஹீரோ. இந்திய சினிமாவிற்கு பெருமை தரும் ஒரு படமாக '2.0' திரைப்படம் இருக்கும். ஹாலிவுட் லெவலில் உருவாகியுள்ள படம். ஷங்கர் மிக நேர்த்தியாக படம் இயக்கும் ஒரு அற்புத இயக்குனர். 3D தொழில்நுட்பத்தில் இந்த படத்தை உருவாக்குவது உண்மையிலேயே மிக கடினமான பணியாகும்.
கடைசியாக இந்த விழாவிற்கு யாரும் எதிர்பாராத வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் வந்து கலந்து கொண்டார். நான் இந்த விழாவில் கலந்து கொள்ள முக்கிய காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்தான் என்று பெருமையுடன் சல்மான்கான் கூறினார்.
கடைசியாக '2.0' படத்தின் மூன்று விதமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் பெருத்த கரகோஷத்தின் இடையே வெளியிடப்பட்டது.