வெளிநாட்டு தமிழர்களுக்கு ரஜினிகாந்த் கூறிய அறிவுரை மற்றும் வாழ்த்துக்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில மணி நேரத்திற்கு முன்பாக தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தனது சமூக வலைப்பக்கத்தில் தெரிவித்தார் என்ற செய்தியைப் பார்த்தோம். இப்பொழுது தனியாக வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனியாக தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும் கொரோனா நேரத்தில் செய்ய வேண்டிய அறிவுரைகளையும் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு இந்த புதிய ஆண்டு இனிதான ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். கொரோனா வைரஸால் முழு உலகமே பாதிப்படைந்துள்ளது. இதற்கு இந்தியாவும் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. உங்களைப் பிரிந்து வாழும் உங்கள் உறவினர்கள், குடும்பத்தினர்கள் சதா நேரமும் உங்களை பற்றி தான் சிந்தனை. உங்களைப் பத்திதான் அக்கரையில் உள்ளனர்.

நீங்கள் எந்த நாட்டில் வாழ்கின்றீர்களோ, அந்த நாட்டின் அரசு, எந்த கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றார்களோ, அதை நீங்கள் தவறாமல் கடைபிடித்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கொடுக்கும் இந்த ஆண்டின் மிகப்பெரிய பரிசு இதுதான். கவலைப்படாதீர்கள்.. இதுவும் கடந்து போகும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார் ரஜினிகாந்தின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

தேமுதிக சார்பில்‌ 5 கோடி ரூபாய்க்கு நிவாரண பொருட்கள், ஆனால்... விஜயகாந்த் அறிக்கை

ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு திரையுலகினர்களும், அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர்.

விஜய் திரைப்படத்தை குறிப்பிட்டு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து கூறிய டி.இமான்!

உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் இன்று தமிழ்ப்புத்தாண்டு தினத்தை கொண்டாடி வரும் நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இன்று தமிழ்ப்புத்தாண்டு

வெளியே போனால் அரசாங்கம் என்னை எடுத்துக்கும்: ஒரு சிறுவனின் க்யூட் வீடியோ

நாடு முழுவதும் 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து இன்று காலை நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக

சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு உதயநிதி செய்த நிதியுதவி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்கனவே 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு முடிந்திருந்த நிலையில் தற்போது மேலும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதுவும் கடந்து போகும்: ரஜினியின் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் கொரோனா வைரஸ் பீதியையும் தாண்டி தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் தமிழ்ப்புத்தாண்டு