ஐசியூவில் ரஜினிகாந்த்: என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள்? பரபரப்பு தகவல்கள்

  • IndiaGlitz, [Tuesday,October 01 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில், இது ஒரு சாதாரண பரிசோதனை மட்டுமே என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி, ரஜினிகாந்த் ஐசியூவில் வைக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 24 மணி நேரத்திற்கு ரஜினிகாந்த் ஐஸ்வர்யா பிரிவில் இருப்பார் என்றும், அதன் பிறகு சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் மருத்துவமனை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இதய மருத்துவர் சாய் சதீஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரஜினிகாந்தின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மருத்துவமனையின் முதல் தளத்தில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சற்று நேரத்தில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், இதற்காகவே அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, ரஜினிகாந்திற்கு ரத்த நாளத்தில் அடைப்பு கண்டறியப்பட்ட நிலையில், ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையின் சார்பில் இன்னும் சில மணி நேரத்தில் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.