தமிழ் புத்தாண்டு தினத்தில் தாமரையை ஏற்று கொண்ட ரஜினிகாந்த்!
- IndiaGlitz, [Thursday,April 14 2022]
தமிழ் புத்தாண்டு தினத்தில் ரசிகர்களிடமிருந்து தாமரையை ரஜினிகாந்த் ஏற்றுக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .
தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு, பிறந்த நாள், தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை கூற அவரது போயஸ் கார்டன் வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருவதும், அவர்கள் முன் தோன்றும் ரஜினிகாந்த் ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்வதுமான நடைமுறை கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று தமிழ் புத்தாண்டை அடுத்து ஏராளமான ரசிகர்கள் அவரது போயஸ் கார்டன் வீட்டின் முன் குவிந்தனர். இதனை அடுத்து ரஜினிகாந்த் ரசிகர்கள் முன் தோன்றி தனது இரு கைகளையும் அசைத்து, ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். மேலும் ரசிகர்கள் கொடுத்த சால்வை மற்றும் தாமரை மலர்களையும் அவர் வாங்கிக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்தை பாஜகவின் ஆதரவாளர் என்று பலர் கூறி வரும் நிலையில் பாஜகவின் சின்னமான தாமரையை அவரது ரசிகர்கள் அவருக்கு பரிசாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Just now Thalaivar video #rajinikanth #thalaivar169 pic.twitter.com/MFaOPqytDc
— Thalaivar Mass (@thalaivarmass01) April 14, 2022