ரஜினிகாந்த் படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி

  • IndiaGlitz, [Saturday,February 20 2016]

மம்முட்டி, நயன்தாரா நடித்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் தமிழ் ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் சித்திக், மலையாள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்ததாக நேற்று செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் இந்த செய்தியில் உண்மையில்லை என ரஜினியின் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரஜினிகாந்த் தற்போது 'கபாலி' மற்றும் '2.0' ஆகிய படங்களில் நடித்து வருவதாகவும், '2.0' படத்தின் படப்பிடிப்பு இவ்வருட முடிவில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் முடியும் என்றும், இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்த பின்னரே அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்து வரும் கபாலி படத்தின் படப்பிடிப்பு முடியுந்தருவாயில் உள்ளது. வரும் மார்ச் முதல் அவர் '2.0' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த படத்தின் பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்று அடுத்தகட்ட படப்பிடிப்பில் இடம்பெறும் என தெரிகிறது. இதற்காக ஹாலிவுட் சண்டைப்பயிற்சி இயக்குனர் மற்றும் சண்டைப்பயிற்சி கலைஞர்கள் சென்னைக்கு வரவுள்ளனர்.

More News

ஜெய்யின் 'புகழ்' ரிலீஸ் தேதி

கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான ஒரே படமான 'வலியவன்' பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றி பெறவில்லை...

பிரேமம்' தெலுங்கு ரீமேக்கில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 'நேரம்' நடிகர் நிவின்பாலி, மடோனா செபாஸ்டியன், சாய்பல்லவி நடித்த 'பிரேமம்' திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி...

'தெறி' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தாணு

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த படத்தின் வியாபாரம் குறித்து ...

'தெறி' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தாணு

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த படத்தின் வியாபாரம் குறித்து...

'பிரேமம்' தெலுங்கு ரீமேக்கில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 'நேரம்' நடிகர் நிவின்பாலி, மடோனா செபாஸ்டியன், சாய்பல்லவி நடித்த 'பிரேமம்' திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி சென்னையிலும்...