close
Choose your channels

ஒரே நாளில் அதர்வாவுக்கு கிடைத்த இரட்டை மகிழ்ச்சி

Thursday, February 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதர்வா முரளி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஈட்டி' நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அதர்வாவின் அடுத்த படமான 'கணிதன்' நாளை வெளிவரவுள்ளது. இந்த படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றதை அடுத்து இந்த படத்திற்கு தற்போது தமிழக அரசின் 30% வரிவிலக்கும் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.


சுமார் 450 திரையரங்குகளில் நாளை ரிலீஸ் ஆகும் இந்த படம் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்காக சிறப்பு காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த், 'அதர்வாவுக்கு இந்த படம் வேற லெவலை கொடுக்கும் என்றும் அறிமுக இயக்குனர் சந்தோஷின் காட்சி அமைப்புகள் சிறப்பாக இருந்ததாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'கணிதன்' திரைப்படத்திற்கு கிடைத்த வரிவிலக்கு செய்தியும், ரஜினியின் வாழ்த்தும் ஒரே நாளில் கிடைத்துள்ளதால் அதர்வா இரட்டை மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

முதல்முறையாக அதர்வாவுடன் 'மெட்ராஸ்' நாயகி கேதரின் தெரசா ஜோடி சேரும் இந்த படத்தில் கே.பாக்யராஜ், மனோபாலா, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிரம்ஸ் சிவமணி இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்துடன் தெறி' படத்தின் டீசரும் பெரிய திரையில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment