ஒரே நாளில் அதர்வாவுக்கு கிடைத்த இரட்டை மகிழ்ச்சி

  • IndiaGlitz, [Thursday,February 25 2016]

அதர்வா முரளி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஈட்டி' நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அதர்வாவின் அடுத்த படமான 'கணிதன்' நாளை வெளிவரவுள்ளது. இந்த படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றதை அடுத்து இந்த படத்திற்கு தற்போது தமிழக அரசின் 30% வரிவிலக்கும் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.


சுமார் 450 திரையரங்குகளில் நாளை ரிலீஸ் ஆகும் இந்த படம் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்காக சிறப்பு காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த், 'அதர்வாவுக்கு இந்த படம் வேற லெவலை கொடுக்கும் என்றும் அறிமுக இயக்குனர் சந்தோஷின் காட்சி அமைப்புகள் சிறப்பாக இருந்ததாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'கணிதன்' திரைப்படத்திற்கு கிடைத்த வரிவிலக்கு செய்தியும், ரஜினியின் வாழ்த்தும் ஒரே நாளில் கிடைத்துள்ளதால் அதர்வா இரட்டை மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

முதல்முறையாக அதர்வாவுடன் 'மெட்ராஸ்' நாயகி கேதரின் தெரசா ஜோடி சேரும் இந்த படத்தில் கே.பாக்யராஜ், மனோபாலா, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிரம்ஸ் சிவமணி இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்துடன் தெறி' படத்தின் டீசரும் பெரிய திரையில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய், விஷாலுடன் சசிகுமார் மோதலா?

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று...

'சண்டக்கோழி 2' திடீர் டிராப். விஷால் கொடுத்த அதிர்ச்சி

கடந்த 2005ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மீன், ராஜ்கிரண் நடித்த 'சண்டக்கோழி' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம்....

ஏப்ரல் 14-ல் அஜித்-விஜய் படங்கள்

விஜய் நடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அதே தினத்தில் அஜித்தின்...

'தல'க்கு மட்டும்தான் தனி மரியாதை : ராதாரவி

'தல' என்று அவரது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜித், பல வெற்றி படங்கள் கொடுக்கும் நடிகர் என்பதை காட்டிலும் மனித நேயமுள்ள ஒரு மனிதர்...

பேட்மேன் - சூப்பர் மேனுடன் கனெக்ஷன் ஆன '2.0

லைகா நிறுவனத்தின் மாபெரும் பட்ஜெட்டில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷயகுமார்...