ஒரே நாளில் பணியை தொடங்கும் ரஜினி-அஜித்

  • IndiaGlitz, [Tuesday,September 20 2016]

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 23ஆம் தேதி வெள்ளி முதல் தொடங்கும் என்பதை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இதே நாளில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சென்னையில் நடைபெறவுள்ள இந்த படப்பிடிப்பில் ரஜினியுடன் அக்சயகுமார், எமிஜாக்சன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் இந்த படத்தில் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் நவம்பர் மாதம் 3வது வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் இசையமைத்து வருகிறார்.

More News

அடுத்த கட்டத்திற்கு செல்கிறது விஜய்யின் 'பைரவா'

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில்...

'தல 57' படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் நாள்

தல அஜித் நடித்து வரும் 57வது படமான 'தல 57' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக முடிந்த நிலையில்...

உதயநிதியின் அடுத்த படத்தில் 'பைரவா' வில்லன்

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில் 'தூங்கா நகரம்'...

'ஆண்டவன் கட்டளை' சென்சார் விபரங்கள்

விஜய்சேதுபதி நடித்த 'தர்மதுரை' 'U'சர்டிபிகேட் பெற்று சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடமும் ஊடகங்களிலும்...

சூர்யாவின் 'எஸ் 3' படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

சூர்யாவின் சிங்கம் 3' திரைப்படம் இன்று மாலை வெளியாகவுள்ளதாக வந்த செய்தியினை காலையில் பார்த்தோம்...