close
Choose your channels

ஆசிய அளவில் 2வது இடத்தை பிடித்த ரஜினியின் '2.0'

Tuesday, November 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த ஞாயிறு அன்று மும்பையில் பிரமாண்டமான விழாவில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. சல்மான்கான், உள்பட பல பிரபலங்கள் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த படம் இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படம் என்ற பெருமையை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது ஆசிய அளவில் தயாராகும் 2வது பெரிய பட்ஜெட் படம் இதுதான் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் $55 மில்லியன் டாலர் செலவில் தயாராகி வருகிறது. அதாவது இந்திய மதிப்பில் இந்த தொகை சுமார் ரூ.360 கோடி ஆகும்
சீனாவில் $100 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட 'Asura' என்ற திரைப்படம் ஆசிய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் என்ற பெருமையை பெற்றுள்ள நிலையில் '2.0' திரைப்படம் ஆசிய அளவில் 2வது இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தமிழ்ப்படம் ஆசிய அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராவது கோலிவுட்டின் திரைப்படங்கள் ஹாலிவுட் தரத்தை நெருங்கிவிட்டதையே காட்டுகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment