ரஜினி-ரசிகர்கள் சந்திப்பு: எந்த நாளில் எந்த மாவட்ட ரசிகர்கள்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் 26 முதல் 31ஆம் தேதி வரை இரண்டாவது கட்டமாக ரசிகர்களை சந்திக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
சென்னை ராகவேந்திர மண்டபத்தில் காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ள இந்த சந்திப்பில், எந்த நாளில் எந்த மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்திக்கவுள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது
டிசம்பர் 26: காஞ்சீபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்கள்
டிசம்பர் 27: நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்கள்
டிசம்பர் 28: மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்ட ரசிகர்கள்
டிசம்பர் 29: கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு மாவட்ட ரசிகர்கள்
டிசம்பர் 30: மற்றும் 31: வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார்.
மேலும் ரஜினியை சந்திக்க வரும் ரசிகர்கள் அவருக்கு மாலைகள் அணிவிக்க கூடாது என்றும், காலில் விழக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரஜினியின் தோளில் கைபோடுவது, கையை பிடித்து குலுக்குவது ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும் என்றும் ரஜினி ரசிகர்களின் தலைமை கழகம் அறிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com