மறைந்த நண்பனின் மகள் திருமணத்தில் ரஜினிகாந்த்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,June 05 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த நிலையில் அவரது மகனின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ். இவர் பல கன்னட திரைப்படங்களிலும் ஒரு சில தமிழ் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் ரஜினிகாந்த் நடித்த 'தாய் மீது சத்தியம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் நடிகர் அம்பரீஷ் மனைவி நடிகை சுமலதா என்பதும் இந்த தம்பதிக்கு அபிஷேக் அம்பரீஷ் என்ற மகன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் அம்பரீஷ் உடல்நல கோளாறு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு காலமானார்.

இந்த நிலையில் அம்பரீஷ் - சுமலதா தம்பதியின் மகன் அபிஷேக் திருமணம் இன்று பெங்களூரில் நடந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் இந்த திருமணத்திற்கு கேஜிஎப் நடிகர் யாஷ் உள்பட பல கன்னட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.