ரஜினிக்கு ஹீரோவாகும் தகுதி இல்லை; நண்பர் எழுதிய புத்தகத்தில் ஆச்சரிய தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் கன்னட நடிகருமான அசோக் என்பவர் ரஜினி குறித்து எழுதிய புத்தகத்தில் ரஜினிக்கு ஹீரோவாகும் தகுதி இல்லை என்று எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை அடையாறு பிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது அவருக்கு நண்பரான அசோக் என்பவர் ரஜினி குறித்து எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியானது. கெளயா சிவாஜி’ என்ற புத்தகத்தை அசோக் எழுதி உள்ள நிலையில், அந்த புத்தகத்தில் அவர் சில ஆச்சரியமான தகவல்களை தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு பிலிம் இன்ஸ்டியூட்டில் ரஜினியை முதன் முதலாக தான் சந்தித்த போது நெருங்கிய நண்பரானோம் என்றும் அன்று முதல் இன்று வரை நட்புடன் இருக்கிறோம் என்றும் அவர் அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார். ரஜினியுடனான நட்பு பள்ளி நாட்களில் இருந்த நட்பு போல் இருந்தது என்றும் தான் கன்னடத்தில் துணை நடிகராக மாறிய போது ரஜினி இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மாறினார் என்றும் ஆனாலும் எங்களுக்குள் நட்பு இன்னும் அப்படியே உள்ளது என்றும் அவர் அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அந்த புத்தகத்தில் ’ரஜினி நடிக்க வந்த காலத்தில் அவருக்கு ஹீரோவாக அப்போது என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்ததோ, அந்த தகுதி எதுவுமே இல்லை என்றும் அவருடைய நிறம் மற்றும் கவர்ச்சி ஆகியவை ஹீரோவுக்கு தகுதியாக இல்லாமல் இருந்தது என்றும் தெரிவித்தார்.
ஆனால் சினிமாவில் உள்ள அனைத்து மூட நம்பிக்கைகளையும் உடைத்து யாரும் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு அவர் உச்சத்தில் இருக்கின்றார் என்றும் இப்போதும் அவரை சந்திக்கும் போது சினிமாவில் நினைத்து பார்க்க முடியாத ஒரு அதிசயமாக தான் அவரை நான் பார்க்கிறேன் என்றும் அவர் அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments