14 மாதங்கள் பாலியல் சித்ரவதை.. ரஜினி, விஜயகாந்த் நடிகை திடுக்கிடும் புகார்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை ஒருவர் தயாரிப்பாளர் ஒருவரால் தான் 14 மாதங்கள் பாலியல் சித்ரவதை செய்யப்பட்டதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினிகாந்த் நடித்த ’குசேலன்’ விஜயகாந்த் நடித்த ’கஜேந்திரா’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும், சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை புளோரா சைனி. இந்த நிலையில் நடிகை ளோரா சைனி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘நான் 20 வயதில் சினிமாவில் நடிக்க வந்தேன், பல தமிழ் தெலுங்கு ஹிந்தி படங்களில் நடித்த உள்ளேன், அதுமட்டுமின்றி விளம்பர படங்களிலும் நடித்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தயாரிப்பாளர் ஒருவரின் காதலில் விழுந்ததால் எனது வாழ்க்கை திசை மாறிப் போனது, அந்த தயாரிப்பாளர் என்னை தவறாக பயன்படுத்தினார், 14 மாதங்கள் அவர் என்னை நடிக்க விடாமல் சித்திரவதை செய்தார், யாரிடமும் அவர் என்னை பேசவிடவில்லை, அவரால் நரக வேதனையை அனுபவித்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியில் அந்த தயாரிப்பாளரிடம் இருந்து தப்பித்து தற்போது பெற்றோரிடம் சந்தோசமாக வாழ்ந்து வருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments