ரஜினி, விஜய் பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. மகனுடன் சென்று வருங்கால கணவருக்கு வைத்த விருந்து..!

  • IndiaGlitz, [Sunday,March 24 2024]

ரஜினி, விஜய், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் உடன் இணைந்து நடித்த நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அந்த நிச்சயதார்த்தத்தில் தனது மகனுடன் சென்ற நடிகை வருங்கால கணவருக்கு விருந்து வைத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரஜினி நடித்த ’2.0’, விஜய் நடித்த ’தெறி’ தனுஷ் நடித்த ’தங்கமகன்’ உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை எமிஜாக்சன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி ஆண் குழந்தை பெற்றார்.

அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்த எமி ஜாக்சன் தற்போது எட் வெஸ்டிக் என்பவரை காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் அவருடன் நடந்த நிச்சயதார்த்த விழாவின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இந்த விழாவுக்கு எமி ஜாக்சன் தனது 4 வயது மகனுடன் வந்து வருங்கால கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நண்பர்களுக்கு விருந்து வைத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. விரைவில் எமி ஜாக்சன் மற்றும் எட் வெஸ்டிக் திருமண தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை எமி ஜாக்சன் நடித்த ’மிஷின் சாப்டர் ஒன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் ’கிராக்’ என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

More News

ஆர்கே சுரேஷ் வில்லனாக மிரட்டும் 'ஒயிட் ரோஸ்'.. 'கயல்' ஆனந்தி படத்தின் டிரைலர்..!

'கயல்' ஆனந்தி முக்கிய வேடத்திலும் ஆர்கே சுரேஷ் வில்லனாகவும் நடித்து மிரட்டிய 'ஒயிட் ரோஸ்' என்ற படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

23 வருடத்திற்கு பின் 'ரமணா' லொகேஷனில் 'SK23': ஏஆர் முருகதாஸின் நெகிழ்ச்சி பதிவு..!

23 வருடத்திற்கு முன் கேப்டன் விஜயகாந்த் நடித்த 'ரமணா' படத்தின் படப்பிடிப்பு நடத்திய அதே இடத்தில் மீண்டும் 'எஸ்கே 23' படத்திற்காக படப்பிடிப்பு நடைபெறுவதாக இயக்குனர் ஏஆர் முருகதாஸ்

இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் திரைப்படமான 'ஆபிரகாம் ஓஸ்லர்': டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லரான 'ஆப்ரஹாம் ஓஸ்லர்' திரைப்படத்தை, ஸ்ட்ரீமிங் செய்துள்ளது.

உன்னை போல் தோழர் நாங்கள் கண்டதிலே.. மதுரை மண்ணின் மைந்தர் சு. வெங்கடேசன் பிரச்சார பாடல்..!

திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி வேட்பாளராக சு.வெங்கடேசன் அவர்கள் போட்டியிடும் நிலையில் அவரது பிரச்சார பாடல் ஒன்று வெளியாகி இணையத்தில்

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: கன்னி ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில், 2024 குரோதி வருடத்தில் கன்னி ராசிக்கான பலன்களை விரிவாக விளக்கியுள்ளார்.