'சூர்யா 44' படத்தில் இணைந்த ரஜினி, விஜய், தனுஷ் பட நடிகை.. ஒரே ஒரு பாடலுக்கு நடனமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்து வரும் 44 வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் தீவுகளில் நடந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் ஏற்கனவே நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் நிலையில் தற்போது நடிகை ஸ்ரேயா சரண் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளதாக தெரிகிறது. சூர்யா மற்றும் ஸ்ரேயா சரண் பாடல் காட்சி ஊட்டியில் சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும் இந்த பாடல் காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு செம விருந்தாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ’சிவாஜி’, தளபதி விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’, தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ உள்பட பல தமிழ் படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா சரண் தற்போது சூர்யா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படம் சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் உருவாகி வருகிறது. இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன்பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout