கேன்ஸ் விழாவில் அணியும் உடையா இது? ரஜினி, விஜய் பட நடிகைக்கு நெட்டிசன்கள் கண்டனம்..!

  • IndiaGlitz, [Thursday,May 18 2023]

பிரான்ஸ் நாட்டில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் அதில் பல இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக 20வது ஆண்டு கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அவர் தனது மகளுடன் கலந்து கொண்டார். மேலும் சாரா அலிகான், மனுஷி செல்லார், ஈஷா குப்தா, ஊர்வசி ரவுட்டாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகைகளில் ஒருவர் எமி ஜாக்சன். ’மதராச பட்டணம்’ என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமாகி அதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ விஜய் நடித்த ’தெறி’ தனுஷ் நடித்த ‘தங்க மகன்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது அவர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ’அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் அருண் விஜய் உடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள விரிப்பில் கிளாமர் உடை அணிந்து எமி ஜாக்சன் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. கேன்ஸ் போன்ற உலக புகழ்பெற்ற திரைப்பட விழாவில் இப்படியா உடை அணிந்து செல்வது? என அவரது உடைக்கு நெட்டிசன்களின் கண்டனங்கள் குவிந்து வருகிறது.