அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்: வைரலாகும் ரஜினி பேரனின் புகைப்படம்

  • IndiaGlitz, [Saturday,April 13 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகளின் மகன் வேத் புகைப்படங்கள் ஒருசில சமூக வலைத்தளத்தில் வைரலானது. ரஜினியின் ஸ்டைலில் இருக்கும் அந்த புகைப்படங்கள் செளந்தர்யா ரஜினியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் செளந்தர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேத் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் வேத் கால்மேல் கால் போட்டு அச்சு அசலாக ரஜினி போன்றே காரில் உட்கார்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பதிவு செய்த செளந்தர்யா ரஜினிகாந்த், 'அவனுடைய ரத்தத்தில் ஸ்டைல் ரத்தம் உள்ளது என்று நினைக்கின்றேன், அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்' என்று கூறியுள்ளார்.,

இந்த புகைப்படத்தை பார்த்த சமூக வலைத்தள பயனாளிகள் தலைவரின் ஸ்டைல் அப்படியே இருப்பதாக கமெண்ட் பகுதியில் குறிப்பிட்டுள்ளனர்.