ரஜினியுடன் நடித்த அனுபவம்: ஒரு இளம் நடிகையின் மகிழ்ச்சி

  • IndiaGlitz, [Tuesday,October 23 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்பதே சினிமாவுக்கு வரும் ஒவ்வொரு நடிகர், நடிகையின் வாழ்நாள் ஆசையாக இருக்கும். சிலருக்கு மிக எளிதிலும், சிலருக்கு பல வருடங்கள் கழித்தும் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் அறிமுகமாகி ஆறு படங்கள் மட்டுமே நடித்துள்ள இளம் நடிகை மாளவிகா மோகனனுக்கு 7வது படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், ரஜினியின் 'பேட்ட' படத்தில் ரஜினிக்கு எதிரான ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படும் மாளவிகா, ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ரஜினியுடன் நடிக்க இவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவருடன் நடிப்பது மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் பார்த்ததில் அவர்தான் மிக எளிமையானவர்

'பேட்ட' படத்தில் என்னுடைய ரோல் மிகவும் சவாலானது. ஏனெனில் எனக்கு தமிழ் தெரியாது. ஒரு மொழிபெயர்ப்பாளரை அருகில் வைத்து கொண்டு எனது கேரக்டரையும், வசனங்களையும் புரிந்து நடித்தேன்' என்று மாளவிகா கூறியுள்ளார்.