ரஜினி, தனுஷ், சிம்பு பட நாயகிக்கு திருமண நிச்சயதார்த்தம்.. க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Friday,August 23 2024]

ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் சிம்பு படங்களில் நாயகியாக நடித்த நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். அதன் பின்னர் அவர் சிம்புவின் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’, தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ உட்பட ஒரு சில தமிழ் படங்களிலும் சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கூட அவர் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேகா ஆகாஷ், சாய் விஷ்ணு என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் நேற்று திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேகா ஆகாஷ் அறிவித்துள்ளார். இது குறித்த க்யூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனது கனவு நனவாகிவிட்டதாகவும், அன்பு, சிரிப்பு மற்றும் மகிழ்ச்சி தன்னுடைய வாழ்வில் தொடங்கிவிட்டது என்றும் அவர் இந்த திருமண நிச்சயதார்த்த பதிவில் கேப்ஷனாக தெரிவித்துள்ளார்.