தனிக்கட்சியெல்லாம் வேண்டாம்.. ரஜினி பாஜக-வில் சேர வேண்டும்..! பொன்.ராதாகிருஷ்ணன்.
Send us your feedback to audioarticles@vaarta.com
"ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே எங்கள் எல்லோரது விருப்பமாக இருக்கிறது. ஆனால் இந்த தருணத்தில் அவர் தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாக சொல்வது சரியாக இருக்காது" என தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.
ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் பிரவேசம் குறித்து பேட்டி கொடுத்திருந்தார். தனக்கு எப்போதும் முதல்வர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை எனவும் மக்கள் மனதில் எழுச்சி ஏற்படும் போது தான் தனிக்கட்சி ஆரம்பித்து கட்சித்தலைவராக மட்டும் செயல்பட்டு அரசை கவனித்து கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். கட்சி அறிவிக்கும் கொள்கைகளை செயல்படுத்தும் பணி மட்டுமே முதல்வருக்கு இருக்கும் என கூறியிருந்தார். மேலும் வாரிசுகளை அரசியலுக்குள் கொண்டு வராமல் மற்ற இளைஞர்களுக்கு வழி ஏற்படுத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இது பற்றி தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் போன்.ராதாகிருஷ்ணனிடம் இது பற்றி கேட்ட போது அவர் 1996-ல் ரஜினி திமுகவை மறுபடியும் ஆட்சியில் இடம்பெற செய்தார். இப்போது அவர் அரசியலுக்குள் வரப்போகிறேன் என சொன்னது வரவேற்கத்தக்கது. ஆனால் தனிக்கட்சி தொடங்காமல் அவர் பாஜகவில் இணையலாம். எங்கள் எல்லோரது விருப்பமும் அதுதான். என் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout