சூப்பர் ஹீரோ தோனியின் கிராபிக்ஸ் நாவலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்… வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட்டின் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி அவெஞ்சர்ஸ் போல காமிக்ஸ் நாவலில் நடித்திருக்கும் தகவலை நாம் ஏற்கனவே பார்த்தோம். புராண காலத்து ஹீரோ கதையான காமிக்ஸ் கதையை 3டி உருவில் அனிமோஷன் காட்சிகளாக உருவாக்கப்படு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து தல தோனியை பழைய காலத்து சூப்பர் ஹீரோவைப் போல அனிமோஷன் தோற்றத்தில் பார்த்த ரசிகர்கள் பலரும் கடும் வியப்பை வெளிப்படுத்தி வந்தனர். மேலும் இந்தக் காமிக்ஸ் கதையை எப்படி படிப்பது? எப்போது வெளிவரும் என்பது போன்ற பல்வேறு எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் தோனியின் சூப்பர் ஹீரோ 3டி அனிமேஷன் கிராபிக்ஸ் நாவலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டு உள்ளார். தமிழில் ரமேஷ் தமிழ்மணி என்பவர் “ஏழாம் அறிவு“ திரைப்படம் மாதிரியே பண்டைய காலத்து சூப்பர் ஹீரோவை வைத்து கற்பனையாக உருவாக்கியதுதான் இந்த நாவல் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக நாவல் என்றால் புத்தகத்தின் வடிவில் இருக்கும். ஆனால் இந்த நாவலை கிராபிக்ஸ் வடிவில் 3 டி காட்சிகளாக உருவாக்கப்பட்டு வெளியிட்டு இருக்கிறது.
மேலும் “அதர்வா தி ஆரிஜன்“ எனும் பெயரில் உருவாக்கப்பட்டு இருக்கும் இநத் கிராபிக்ஸ் நாவலை மகேந்திரசிங் தோனிக்கு சொந்தமான தோனி எண்டர்டைமண்ட் நிறுவனம் தாயாரித்து இருப்பதும் இது அமோசானில் வெளிவர இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்ற பிறகு தல தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
இந்நிலையில் கிராபிக்ஸ் காட்சிகளில் அதுவும் 3டி அனிமேஷினில் ஒரு புராண காலத்து ஹீரோவாக தோனி அவர்கள் வலம்வர இருக்கிறார். இந்த கிராபிக்ஸ் நாவல் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த கிராபிக்ஸ் நாவலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டதோடு தொலைபேசியில் தோனியை அழைத்து பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout