close
Choose your channels

'கபாலி'யின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

Wednesday, October 21, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை அமெரிக்காவில் வெளியிடும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று Cine Galaxy Inc. இந்த நிறுவனம் சமீபத்தில் நாகார்ஜூனன் நடித்த 'மனம்' உள்பட பல தெலுங்கு படங்களை அமெரிக்காவில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தை அமெரிக்காவில் தமிழ், மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியிடும் உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து இந்நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், "மனம், பவர், மற்றும் Bhale Bhale Magadivoy ஆகிய வெற்றிப்படங்களை அமெரிக்காவில் வெளியிட்டதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 'கபாலி' படத்தையும் அமெரிக்காவில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளதில் பெருமை அடைகிறோம்' என்று கூறப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேங்ஸ்டாராக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு மனைவியாக ராதிகா ஆப்தே மற்றும் மகளாக தன்ஷிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் 'மெட்ராஸ்' கலையரசன், 'அட்டக்கத்தி' தினேஷ், கிஷோர், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களின் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வரும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த திரைப்படம், வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment