ரஜினி, கமல் இருவரில் ஆட்சியை பிடிப்பது யார்? குருமூர்த்தி கருத்து

  • IndiaGlitz, [Wednesday,May 09 2018]

கோலிவுட் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் வரும் தேர்தலில் களத்தில் குதிக்கவுள்ளனர். கமல்ஹாசன், அரசியல் கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். ரஜினியின் அரசியல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த இருவரின் கட்சிகளுக்கும் பொதுமக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஜினி, கமல் இருவரில் ரஜினிதான் ஆட்சியை பிடிப்பார் என்றும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும் என்றும் துக்ளக் ஆசிரியரும், பாஜக ஆதரவாளருமான குருமூர்த்தி இன்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி, கமல் இருவரிடத்திலும் நான் அரசியல் பேசினாலும் அவர்களுக்கு நான் அரசியல் ஆலோசகர் இல்லை என்றும் குருமூர்த்தி தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட எந்த எம்.எல்.ஏ-வுக்கும் தைரியமில்லை என்பதால் தற்போதைய ஆட்சி இன்னும் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார். 

More News

இளம் ரசிகையின் கையை விஜய் பிடித்தது ஏன்?

சமீபத்தில் சென்னையில் விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்தித்தபோது கேரளாவை சேர்ந்த ஏராளமான விஜய் ரசிகர்கள் அவரை பார்க்க வருகை தந்திருந்தனர். அவர்களில் ஒருவர் சரண்யா விசாக்.

சிவாஜி வீட்டு மருமகள் ஆகின்றாரா பிக்பாஸ் சுஜா?

நடிகை சுஜா தமிழில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலம் அடைந்தார்.

சாவித்ரியை மீண்டும் உயிருடன் கொண்டு வந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ்: பிரமாண்ட இயக்குனர் பாராட்டு

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'மகாநதி என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பான 'நடிகையர் திலகம்' திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

காலா போன்ற காளான்கள் காணாமல் போகும்: அமைச்சர் ஜெயகுமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திரையுலகை சேர்ந்த சிலரும், அரசியல்வாதிகளும் கடந்த சில மாதங்களாக கடுமையாக விமர்சனம் செய்து வருவது தெரிந்ததே.

'இரும்புத்திரை'யில் ஆதார் ஆபத்து குறித்த காட்சிகளா? இயக்குனர் மித்ரன் விளக்கம்

பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாதி மட்டும் இன்று பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது.