close
Choose your channels

திருமணமாகி ஒரு வாரம் கூட ஆகவில்லை.. அதற்குள் கர்ப்பமா? கணவருடன் மருத்துவமனை சென்ற ரஜினி பட நடிகை..!

Saturday, June 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகைக்கு கடந்த வாரம் திருமணம் ஆன நிலையில் இன்று அவர் தனது கணவருடன் மருத்துவமனைக்கு சென்றதாக வெளியாகி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லிங்கா’ திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி மற்றும் சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்திருந்தனர். சோனாக்ஷி சின்கா நடித்த ஒரே தமிழ் படம் இதுதான் என்ற நிலையில் கடந்த வாரம் அவர் நடிகர் ஜாஹீர் இக்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் எளிய முறையில் நடந்ததாகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஜூன் 23ஆம் தேதி ஜாகிர் இக்பால் மற்றும் சோனாக்ஷி சின்கா திருமணம் நடந்த நிலையில் இன்று சோனாக்ஷி தனது கணவருடன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சோனாக்ஷி சின்ஹா எதற்காக மருத்துவமனை சென்றார் என தெரியாத நிலையில் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவர் கர்ப்ப பரிசோதனை செய்வதற்காக சென்று இருக்கலாம் என்று கமெண்ட்களை பதிவு செய்து வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சோனாக்ஷி சின்ஹா மற்றும் அவரது கணவர் இருவரும் இந்த செய்திக்கு எந்தவித விளக்கமும் இதுவரை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு முன்பே பாலிவுட் நடிகைகள் கர்ப்பமாகி அதன்பின் திருமணம் செய்து கொள்வது என்பது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. நடிகை அலியா பட் உள்பட ஒரு சில நடிகைகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment