4 கார் பார்க்கிங், 19வது மாடி: ரூ.8 கோடிக்கு அபார்ட்மெண்ட் வாங்கிய ரஜினி பட நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த நடிகர் ஒருவர் மும்பையின் மைய பகுதியில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றை வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’2.0’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகர் அக்ஷய்குமார். பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் இவர் ஏற்கனவே மும்பையில் பல சொத்துக்கள் வைத்திருக்கும் நிலையில் தற்போது மும்பையின் மையப்பகுதியில் ஒரு அபார்ட்மெண்ட் வீட்டை வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்த அப்பார்ட்மெண்ட் வீட்டின் மதிப்பு ரூபாய் 7.8 கோடி என்றும் கடந்த 7ஆம் தேதி இந்த வீடு ரிஜிஸ்டர் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 1878 சதுர அடி கொண்ட இந்த அப்பார்ட்மெண்டில் 4 கார் பார்க்கிங் இருப்பதாகவும், இந்த அபார்ட்மென்ட்டில் அக்சயகுமார் வாங்கிய வீடு 19 ஆவது மாடியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

ஏற்கனவே மும்பை ஜூஹூ என்ற பகுதியில் அக்சயகுமாருக்கு சொகுசு பங்களா உள்ளது என்பதும் அதுமட்டுமின்றி கோவா மற்றும் மொரீசியசில் அவருக்கு சொத்துக்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

More News

இந்த வாரம் ஒரே ஒரு படம்  தான்: ஓடிடி ரிலீஸ் குறித்து ஒரு பார்வை!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் 4 முதல் 5 திரைப்படங்கள் வரை ரிலீசாகி வரும் நிலையில் அதற்கு இணையாக ஓடிடியிலும் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருவதை பார்த்து வருகிறோம்.

அஜித்தின் 'விஸ்வாசம்' இந்தி ரீமேக்கிற்கு போட்டி போடும் 2 பிரபலங்கள்!

அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க இரண்டு பிரபல நடிகர்கள் போட்டி போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

'ஆர்.ஆர்.ஆர்' போலவே இரண்டு ரிலீஸ் தேதியை ரிசர்வ் செய்த 'வலிமை'

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் கடந்த 7 ஆம் தேதியே ரிலீசாக வேண்டிய நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. 

மீண்டும் நடிக்க வரும் குண்டு கல்யாணம்: பிரபலத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரல்

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான குண்டுகல்யாணம் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

சமீபத்தில் ஹிட் கொடுத்த இயக்குனருடன் இணையும் கார்த்தி!

சமீபத்தில் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனருடன் நடிகர் கார்த்தி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.