இதையாவது தமிழகத்திற்கு செய்ய வேண்டும்: தமிழருவி மணியனிடம் கூறிய ரஜினி

  • IndiaGlitz, [Friday,June 02 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்தபோது அரசியல் வருகை குறித்து சூசகமாக போர் வரும்போது பார்த்து கொள்வோம் என்று கூறினார். மேலும் அவர் பல அரசியல் தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்தும் வருகிறார். அவர்களில் ஒருவர் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் ரஜினிகாந்த் குறித்து தமிழருவி மணியன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியபோது, 'ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆகவேண்டும் என்று துடிப்பதாக பலர் தவறாக எண்ணி கொண்டிருக்கின்றனர். அவருக்கு தெளிவான அரசியல் பார்வை இருக்கின்றது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், பதவி மட்டுமே தேவையில்லை என்பதே அவரது எண்ணம்

ரஜினிகாந்த் தனது மனதில், 'ஒரு சாதாரண மனிதராக தமிழகத்திற்கு வந்த தனக்கு, செல்வமும், புகழும் அள்ளி அள்ளிக் கொடுத்தவர்கள் தமிழ் மக்கள். அவர்களுக்காக அரசியல் அமைப்பை சுத்தப்படுத்தும் பணியையாவது தொடங்கி வைக்க வேண்டும் என்று அவர் விரும்புவதாக தமிழருவி மணியன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More News

சிம்பு படத்தை தூக்கி நிறுத்துமா வைரமுத்துவின் 'ரத்தம்'

சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு 95%...

இந்தியாவில் திடீர் நிலநடுக்கம். பொதுமக்கள் அச்சம்

இந்திய தலைநகர் டெல்லி அருகில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பெரும் அச்சம்...

இசையுலகின் ஒரே ராஜா, அவர்தான் இளையராஜா:

இசைஞானம் உள்ளவர்கள் மட்டுமே இசையை ரசித்து கொண்டிருந்த நிலையை மாற்றி முதல்முதலாக பாமரனையும் தலையாட்டும்...

என் வேலையை நயன்தாரா சுலபமாக்கிட்டாங்க. 'இமைக்கா நொடிகள்' இயக்குனர்

பொதுவாக கோலிவுட் திரையுலகில் நயன்தாரா குறித்து ஒரு விஷயத்தை அவரை இயக்கிய அனைத்து இயக்குனர்களும் கூறுவதுண்டு...

ஜாமீன் கிடைத்த சில நிமிடங்களில் முதல் விக்கெட்டை வீழ்த்திய டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட வழக்கில் ...