சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் ரஜினி மக்கள் மன்றம்: திடீர் உத்தரவால் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,April 27 2019]

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்துள்ளதால் இந்த முடிவை பொறுத்தே தற்போதைய ஆட்சி நீடிக்குமா? கவிழுமா? என்பது தெரியவரும்.

22 தொகுதிகளில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் குறைந்தது ஐந்து தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றால் இந்த ஆட்சி நீடிக்கும். அதேபோல் 19 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி மாறும். ஆனால் அரசியல் விமர்சகர்களின் கணிப்பின்படி இந்த இரண்டும் நடக்க வாய்ப்பில்லை என்பதால் தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

இந்த நிலையில் தமிழகத்தில் எப்போது சட்டமன்ற தேர்தல் நடந்தாலும் தேர்தலை சந்திக்க தயார் என சமீபத்தில் ரஜினிகாந்த் பேட்டி அளித்த நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகுங்கள் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு சுற்றறிக்கை மூலம் உத்தரவிடப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது. இதனால் தேர்தல் முடிவு வெளியானதும், ரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பும் வெளியாகும் என கருதப்படுகிறது