உள்ளாட்சி தேர்தல்: ரஜினி மக்கள் மன்றத்தின் எச்சரிக்கை அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,December 10 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்றில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து இன்று மீண்டும் ஒரு அறிக்கை ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில்‌ நடைபெறவிருக்கும்‌ உள்ளாட்சி தேர்தலில்‌ நமது அன்புத்தலைவர்‌ ரஜினிகாந்த்‌ அவர்கள்‌ யாருக்கும்‌ ஆதரவு கொடுக்கவில்லை. ஆகையால்‌ யாரும்‌ ரஜினி மக்கள்‌ மன்றத்தின்‌ பெயரிலோ. ரஜினி ரசிகர்‌ மன்றத்தின்‌ பெயரிலோ, மன்றத்தின்‌ கொடியையோ தலைவரின்‌ பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால்‌ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று மாநில தலைமை அறிவுறுத்தி உள்ளது. அதன்‌ தொடர்ச்சியாக இன்று மாநில நிர்வாகி வி.என்.சுதாகர்‌ அவர்கள்‌ மாவட்ட செயலாளரை அலைபேசியில்‌ தொடர்பு கொண்டூ இச்செய்தியை மிகவும்‌ வண்டிப்புடன்‌ வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டார்‌.

எனவே நம்‌ திருச்சி மாவட்டத்தின்‌ மாநகர, ஒன்றிய, நகர, பகுதிகளில்‌ நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில்‌, நம்‌ மக்கள்‌ மன்றத்தைச்‌ சார்ந்த யாரும்‌ போட்டியிடவோ, யாருக்கும்‌ ஆதரவாக வாக்கு சேகரிக்கவோ கூடாது என்று தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மீறினால்‌ சட்ட நடவடிக்கைக்கு உடட்படுத்தப்படுவார்கள்‌ என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்‌.

More News

ரஜினியால் ஒரு தேர்தலை மட்டுமே சந்திக்க முடியும்: ரங்கராஜ் பாண்டே

ரஜினிகாந்த் அவர்களுக்கு 70 வயது ஆகி விட்டதால் அவரால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும் என்று பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

'தலைவர் 168' படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 168' படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே 

விஜய்யின் 'தளபதி 64' படத்தில் பிரபுதேவா கனெக்சன்

விஜய், விஜய்சேதுபதி முதல்முறையாக இணைந்து நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் தினந்தோறும்

தோனி..தோனி என்று கத்திய ரசிகர்கள். விரக்தியை வெளிப்படுத்திய விராட்.

நேற்றைய போட்டியின் போது ரிஷப பந்த் கேட்சை விட்டதால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி..தோனி என்று கத்தினார். இதனால் விரக்தியடைந்த கேப்டன் விராட் கோலி ரசிகர்களிடையே அமைதியாய்

2019-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி..!

2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்ஷி முடி சூட்டப்பட்டார்