செல்லாத நோட்டை வைத்திருந்த மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி மக்கள் மன்றம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவை மாவட்டம் கொண்டயம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த கமலா அம்மாள் என்ற 92 வயது மூதாட்டி கடந்த பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு ரூ.31,500 சேமித்து வைத்திருந்தார். ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு குறித்து அறியாத கமலம்மாள் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் வங்கியில் கொடுத்து மாற்றாமல் இருந்துள்ளார்.
இந்தநிலையில் தற்செயலாக தற்போது அந்த பணம் செல்லாது என தெரிய வந்ததை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்தார். கடைசி காலத்தில் செலவுக்கு மற்றும் இறுதி சடங்கிற்காக அவர் சேகரித்து வைத்திருந்த பணம் செல்லாது என்பதால் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்த செய்தி குறித்து சமூக வலைதளங்களில் மற்றும் இணையதளங்களில் வைரலானது.
இதனை அடுத்து அந்த மூதாட்டிக்கு ரஜினி மக்கள் மன்றம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. அவர் சேமித்து வைத்திருந்த 31 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை அவருக்கு கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கினார்கள். இதனை பெற்றுக் கொண்ட அந்த மூதாட்டி ரஜினி ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சேமித்து வைத்த பணம் செல்லாது என்றதும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்த மூதாட்டிக்கு ரஜினி ரசிகர்கள் செய்த உதவி மிகப்பெரியதானது என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com